1. சீட்டுத் தொகை தினந்தோறும், வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் செலுத்திக்கொள்ளலாம்.
2. சீட்டு சேர்க்கைகட்டணம் ஒரு லட்சத்திற்கு ரூ.100/- நிர்வாக கமிஷன் 4% மட்டுமே, மேலும் அதிகபட்ச கசர் தொகை 35% மட்டுமே.
3. வாடிக்கையாளருக்கு 21-வயதுக்கு மேல் 60-வயதிற்குள்ளும், நாமினியாக பரிந்துரைக்கப்படுபவர் 21-வயதிற்கு மேலும் 58-வயதிற்குள்ளும், இரத்த சொந்தமாகவும் இருக்க வேண்டும். மேலும் ஜாமீன்தாரர்களுக்கு 21-வயதிற்கு மேலும் 58-வயதிற்குள்ளும், இரத்த உறவாக இல்லாமலும் இருக்க வேண்டும்.
4. ஒவ்வொரு மாதம் தவணைத் தேதிக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும்.
5. தேதியிலிருந்து ஒவ்வொரு மாதம் தவணைத் 30-தினங்களுக்குள் தவணைத் தொகை செலுத்தாத வாடிக்கையாளர்கள் கழிவும் (கசர்) சேர்த்து மொத்தத் தொகையையும் செலுத்த வேண்டும்.
6. வாடிக்கையாளர்கள் சீட்டு எடுக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மாத தவணையைக் குறிப்பிட்ட தவணைத் தேதிக்குள் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சீட்டுத் தொகை தவணைத் தேதியிலிருந்து 25-வேலை நாட்களில் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் தவணைத்தொகை பாக்கி இருக்கும் பட்சத்திலோ அல்லது காலதாமதமாக செலுத்தியிருந்தால் சீட்டுத் தொகை வழங்க காலதாமதம் ஆகும்.
7. சீட்டு எடுக்காத வாடிக்கையாளர் எந்த ஒரு சூழ்நிலை காரணத்திற்காகவும் தொடர்ந்து தவணைத் தொகையை செலுத்த முடியாமல் விலக நேரிட்டால் சீட்டு மதிப்பிலிருந்து நிர்வாக கமிஷன் 4% தொகையை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகையை, அந்த வாடிக்கையாளருக்கு பதிலாக புதிய வாடிக்கையாளர் சேர்ந்த நாளிலிருந்து 30-தினங்களுக்குப் பிறகுதான் வழங்கப்படும்.
8. வாடிக்கையாளர் மற்றும் அவரின் நாமினி, ஜாமீன்தாரர்களிடமிருந்து நிறுவாகத்தினரால் கோரப்பட்ட பாதுகாப்பு ஆவணங்கள் வாங்கப்பட்டு, அனைத்தையும் தணிக்கை குழுவினரால் கள ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டப் பிறகுதான் சீட்டுத் தொகை வழங்கப்படும். அவ்வாறு பெறப்பட்ட ஆவணங்களில் குறைகள் இருந்தாலோ அல்லது போதுமான ஆவணங்கள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் சீட்டுத் தொகை வழங்க இயலாது.
9. எந்த காரணத்திற்காகவும் வாடிக்கையாளர்கள் ரசீது பெறாமல் செலுத்தப்படும் தொகைக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
10. தணிக்கை குழுவின் கள ஆய்விற்கு வாடிக்கையாளரும் அவர்களின் நாமினி, ஜாமீன்தாரர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
11. எதிர்காலத்தில் நிறுவனத்தின் விதிமுறை மற்றும் நடைமுறைகள் மாற்றம் செய்ய நேரிட்டால் அந்த தேதி முதல் அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு நிறுவனத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
மேலே உள்ள விபரங்கள் அனைத்தும் எனது மொழியில் நான் படித்தும் எனக்கு புரியும்படி ருபி அபெக்ஸ் நிறுவனத்தின் பணியாளரால் படிக்கப்பட்டு எனக்கு புரியவைக்கப்பட்ட பிறகு முழு மனதுடன் நான் மேற்கண்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று இந்த ஆவணத்தின் மூலம் உறுதியளிக்கின்றேன்.